மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கணவன் கண்முன்னே மனைவி சாவு


மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கணவன் கண்முன்னே மனைவி சாவு
x
தினத்தந்தி 25 July 2019 4:00 AM IST (Updated: 25 July 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

சோழசிராமணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் கணவன் கண்முன்னே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

பரமத்திவேலூர்,

ஈரோடு மாவட்டம் சோமூர் அவல்பூந்துறை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவருடைய மனைவி வெண்ணிலா (வயது 27). இவர்கள் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

பின்னர் இரவு சொந்த ஊருக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பாலசுப்ரமணி தனது மனைவியுடன் சோழசிராமணி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பாலசுப்ரமணி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து கணவன் கண்முன்னே வெண்ணிலா பரிதாபமாக உயிரிழந்தார்.

வெண்ணிலாவின் கணவர் பாலசுப்ரமணியும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஜேடர்பாளையம் அருகே உள்ள ஜமீன் இளம்பள்ளியை சேர்ந்த பாலசுப்ரமணி (47) என்பவரும் காயமடைந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story