டாஸ்மாக் குடோன்களில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் சுமைப்பணி தொழிலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
டாஸ்மாக் குடோன் களில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என சுமைப்பணி தொழிலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
கிருஷ்ணராயபுரம்,
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரில் தமிழ்நாடு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் பிச்சைமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் குடோன்களில் ஒரே மாதிரியான ஏற்று கூலி வழங்க வேண்டும்.
அடிப்படை வசதிகள்
டாஸ்மாக் குடோன்களில் அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில் குடிதண்ணீர், கழிப்பறைகள் செய்து கொடுக்க வேண்டும். நவம்பரில் கோரிக்கையை மாநில மாநாடு நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில நிர்வாகிகள் பீர் முகமது, முகமதுல்லா ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, குணசேகரன், வெங்கடபதி, விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story