நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் படுகொலை: வடமாநில கொள்ளை கும்பலுக்கு தொடர்பா? தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் கொலையில் வடமாநில கொள்ளை கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் உமா மகேசுவரி (வயது 62). தி.மு.க.வை சேர்ந்த இவர் நெல்லை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும் இருந்து வந்தார். உமா மகேசுவரியின் கணவர் முருகசங்கரன் (72). நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுடைய வீடு நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகில் உள்ள ரோஸ்நகரில் உள்ளது. இவர்களுக்கு கார்த்திகா, பிரியா என 2 மகள்கள் உள்ளனர். உமா மகேசுவரி வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரி என்பவர் பணிப்பெண்ணாக வேலை செய்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உமா மகேசுவரி, முருகசங்கரன், மாரி ஆகிய 3 பேரையும் கொள்ளை கும்பல் கொடூரமாக கொலை செய்து விட்டு, தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், துணை போலீஸ் கமிஷனர் சரவணன், உதவி போலீஸ் கமிஷனர்கள் கோடிலிங்கம், நாகசங்கர், பரமசிவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் வந்து ரேகை மற்றும் தடயங்களை சேகரித்து சென்றனர்.
வீட்டில் உள்ள தடயங்களை யாராவது அழித்துவிடக்கூடும் என்பதால் வீட்டிற்குள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. வீடு போலீசாரின் கட்டுப்பாட்டில் பூட்டி வைக்கப்பட்டு இருந்தது.
3 பேரை கொடூரமாக கொன்ற கொள்ளை கும்பலை பிடிக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையாளிகள் உமா மகேசுவரியின் கழுத்தில் கிடந்த நகை, கையில் அணிந்திருந்த தங்க வளையல்கள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 20 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று உள்ளனர். எனவே, இந்த கொலைகள் நகைக்காக நடந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
வீட்டில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் கொலையாளிகள் யார்? எப்படி உள்ளே வந்தனர்? என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை. இருந்தாலும் அந்த பகுதியில் உள்ள கடைகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
உமா மகேசுவரியின் அண்ணன் மகன் பிரபு மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
உமா மகேசுவரியின் வீட்டின் அருகில் ஒரு புரோட்டா கடை உள்ளது. நெல்லை மாநகர பகுதியில் பல இடங்களில் நடைபெறுகின்ற கட்டிட வேலையில் வடமாநிலத்தை சேர்ந்த பலர் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி கட்டிட பணியில் ஈடுபடக்கூடிய வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த கடைக்கு சாப்பிட வந்து சென்றுள்ளனர்.
அப்படி சாப்பிட வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல், உமா மகேசுவரி வீட்டில் அதிக அளவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததையும், காவலுக்கு காவலாளி மற்றும் பாதுகாப்புக்கு நாய் கூட இல்லாததையும் பார்த்து விட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்காக அந்த கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சில நாட்களாக பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதில் சந்தேகப்படும்படியாக வந்த சில வடமாநிலத்தை சேர்ந்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலும், நெல்லை மாநகர பகுதியில் தங்கி இருந்து கட்டிடப்பணியில் ஈடுபட்டு வருகின்ற 20 வடமாநில இளைஞர்களை தனிப்படை போலீசார் பிடித்து சென்று அவர்களுடைய கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் நேற்று காலையில் கொலை செய்யப்பட்ட உமா மகேசுவரியின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு அவருடைய உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.
கொலையாளிகள் வீட்டின் பின்புறம் உள்ள காலியான இடத்தில் காரை நிறுத்திவிட்டு, பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து உள்ளனரா? என்பதை துணை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் பார்வையிட்டு, அதில் பதிந்து உள்ள தடங்களையும் சோதனை செய்ய உத்தரவிட்டார்.
இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட உமா மகேசுவரியின் உடல் வைக்கப்பட்டு இருந்த பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மதியம் உமாமகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அவர்களது வீட்டின் முன்பும், அருகில் உள்ள அவருடைய மகள் வீட்டிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த கொலை தொடர்பாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடகிருஷ்ணன், நெல்லை டவுன் உதவி கமிஷனர் சதீஷ்குமார், பாளையங்கோட்டை உதவி கமிஷனர் கோடிலிங்கம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் கொலை நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு 3 செல்போன்கள் கிடந்தது. அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த 3 செல்போன்களும் கொலை செய்யப்பட்ட உமாமகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோருடையது என்று தெரியவந்தது. கொலை நடந்த அன்று அந்த செல்போன்களில் பேசியவர்கள் யார், யார்? என்ற விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Tags :
Next Story