பள்ளி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை: போலீஸ் ஏட்டுக்கு 10 ஆண்டு ஜெயில் குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு
பள்ளி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
களியக்காவிளை,
குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் சேவியர் (வயது 52). இவர் தக்கலை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பளுகலை அடுத்த மத்தம்பாலை சோதனை சாவடியில் பணியில் இருந்தார்.
அப்போது அவர் மதுபோதையில் இருந்தார். இந்தநிலையில் அந்த வழியாக சென்ற 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை வழிமறித்துள்ளார். பின்னர் மிரட்டி அந்த பகுதியில் உள்ள மறைவான இடத்துக்கு மாணவனை அழைத்து சென்று, ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
10 ஆண்டு ஜெயில்
மாணவனிடம் அத்துமீறிய ஏட்டு சேவியரின் நடவடிக்கையை, அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திடுக்கிட்டனர். உடனே ஆவேசமடைந்த அவர்கள் சேவியரை மடக்கி பிடித்து, மாணவரை மீட்டனர். இதனையடுத்து பளுகல் போலீஸ் நிலையத்தில் சேவியரை ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு குழித்துறை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோசம் விசாரித்தார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் அவர் பரபரப்பு தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட சேவியருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் மீனாட்சி வாதாடினார்.

Related Tags :
Next Story