முதல்-மந்திரி பட்னாவிசுக்கு எதிரான தேர்தல் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு


முதல்-மந்திரி பட்னாவிசுக்கு எதிரான தேர்தல் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 24 July 2019 10:19 PM GMT (Updated: 24 July 2019 10:19 PM GMT)

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீது 1996 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் பதியப்பட்ட 2 கிரிமினல் வழக்குகள் மீதான விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

மும்பை,

கடந்த 2014-ம் ஆண்டு தேவேந்திர பட்னாவிஸ் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தபோது, நிலுவையில் உள்ள இரு வழக்குகள் குறித்து பிரமாண பத்திரத்தில் குறிப்பிடாமல் மறைத்ததாகவும், இதனால் அவரது தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் சதீஷ் உகே என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனு செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததால் அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் விசாரித்து வந்தனர். இரு தரப்பு வாதங்களை தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Next Story