2.84 லட்சம் இடங்களில் கொசு புழுக்கள் அழிப்பு: மாநகராட்சி தகவல்


2.84 லட்சம் இடங்களில் கொசு புழுக்கள் அழிப்பு: மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 25 July 2019 5:00 AM IST (Updated: 25 July 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் 2.84 லட்சம் இடங்களில் நோய்களை பரப்பும் கொசு புழுக்கள் அழிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

மும்பை,

மும்பையில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் மழைக்காலம் ஆகும். ஆண்டுதோறும் மழைக்கால நோய்களால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். நோய் பரப்பும் கொசு உற்பத்தியின் காரணமாக டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

கொசுவினால் நோய் பரவுவதை தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொசு உற்பத்திக்கு காரணமானவர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் அபராதம் விதிக்கப்படுகிறது.

மும்பையில் தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில் நோய் பரப்பும் கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு கொசு புழுக்கள் (லார்வே) அழிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மும்பையில் மேற்கொண்ட ஆய்வில் 2 லட்சத்து 84 ஆயிரம் நோய் பரப்பும் கொசு உற்பத்தி இடங்கள் கண்டறியப்பட்டு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து கொசு புழுக்கள் அழிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் கொசு உற்பத்திக்கு ஏதுவாக கவனிப்பு இன்றி நகரில் கிடந்த 8 ஆயிரத்து 729 டயர்கள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Next Story