ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு தேவை நகராட்சி நிர்வாகத்திடம் மனு


ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு தேவை நகராட்சி நிர்வாகத்திடம் மனு
x
தினத்தந்தி 25 July 2019 3:30 AM IST (Updated: 25 July 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்களுக்கு அரசாணைப்படி ஊதிய உயர்வு வழங்க கோரி நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் நகராட்சி பகுதியில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் மிக குறைந்த அளவில் உள்ள நிலையிலும், துப்புரவு பணியாளர்களை நியமிக்க அரசு தடை விதித்துள்ள காரணத்தினாலும் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் 47 துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளபடி தினசரி ரூ.214 ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால் அரசு உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.437 தினசரி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்த பணியாளர்களும் நிரந்தர பணியாளர்களை போல துப்புரவு பணியை மேற்கொள்ள வேண்டி உள்ளது.

இந்தநிலையில் ஒப்பந்த அடிப்படையிலான 47 துப்புரவு பணியாளர்களும் நேற்று நகராட்சி அலுவலகத்துக்கு சென்று தங்களுக்கு அரசு உத்தரவிட்டப்படி ரூ.437 வழங்க வேண்டும் என கோரி மனு கொடுத்தனர். அதிகாரிகள் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Next Story