ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு “நகருக்குள் வனம்”அமைக்கும் பணி - கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்
சேலம் சீலநாயக்கன்பட்டியில் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு “நகருக்குள் வனம்” அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
சேலம்,
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம் 60-வது வார்டுக்கு உட்பட்ட சீலநாயக்கன்பட்டி பகுதியில் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மைய வளாகத்தில் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு “நகருக்குள் வனம்” அமைக்கும் பணியை நேற்று மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் முன்னிலை வகித்தார்.
இதைத்தொடர்ந்து அங்கு நாவல், தேக்கு, புங்கை, சில்வர்ஓக், பூவரசு, வேம்பு, பலா, எலுமிச்சை, கொய்யா, மாதுளை, நெல்லி, சந்தனம், சவுக்கு உள்பட ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ராமன் கூறியதாவது:-
சேலம் மாநகர் பகுதிக்குள் வனங்கள் அமைப்பது மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதோடு மட்டுமல்லாமல் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நட்டு நகருக்குள் வனம் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மழைநீர் சேகரிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக மண்டலம் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மழைநீரை சேகரிப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலங்களில் நகர் புறங்களில் வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு நகருக்குள் வனம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மழைநீரை அடர்ந்த வனங்களில் சேமிப்பது போல் நகர்புற வனங்களில் மழைநீரை சேமித்திட முடியும். மேலும் காற்றில் உள்ள ஈரப்பதம் குறையாது.
இந்த வனத்தில் உள்ள மரங்களை பாதுகாப்பதால் வெப்பம் குறைக்கப்படுவதோடு மழைகாலங்களில் மண் அரிப்பும் தடுக்கப்படும். நகர்புற வனங்களில் வைக்கப்படும் நாட்டு மரங்களுக்கு அதிக இடைவெளி தேவையில்லை என்பதால் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இது போன்று நகருக்குள் வனம் கூடுதலாக அமைத்திட முடியும்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்படாத வகையில் உள்ள இடங்களை தேர்வு செய்து இதுபோன்ற நகருக்குள் வனங்கள் அமைப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும். மேலும் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்படும் இதுபோன்ற நகருக்குள் வனப்பகுதிகளை ஈஸி பாரஸ்ட் என்ற அமைப்பை சேர்ந்த குழுவினர் ஒரு ஆண்டு காலத்திற்கு இலவசமாக பராமரித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் அசோகன், உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், சுகாதார அலுவலர்கள் சித்தேஸ்வரன், கோபிநாத், ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story