கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டாத 2 கடைகளுக்கு சீல் வைப்பு உழவர்கரை நகராட்சி அதிரடி
கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டாத 2 கடைகளுக்கு உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
புதுச்சேரி,
உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட நடேசன் நகர் 100 அடி சாலையில் கார் உதிரி பாகங்கள் விற்கும் 2 கடைகள் இயங்கி வருகின்றன. அந்த கடைகளில் பணி செய்பவர்கள் உதிரி பாகங்களை சுற்றிவரும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் அதன் கழிவுகளை வெளியில் போடுவதால் சாலையோரம் அசுத்தமாகவும் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்படுவதாகவும் உழவர்கரை நகராட்சிக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அந்த இடத்தை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி குப்பை தொட்டியில் கொட்டுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அந்த 2 கடைக்காரர்கள் கேட்கவில்லை. இதையடுத்து அந்த கடைகளுக்கு நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையில் அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும் அந்த 2 கடைகளும் நகராட்சி உரிமம் பெறாமல் இதுவரை இயங்கி வந்ததும் தெரியவந்தது.
எனவே உழவர்கரை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வர்த்தகம் செய்யும் அனைவரும் நகராட்சியின் வர்த்தக உரிமம் கண்டிப்பாக பெற வேண்டும். சாலைகளில் குப்பைகளை போடாமல், 2 குப்பை தொட்டிகள் வைத்து அதில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக சேகரித்து, துப்புரவு பணியாளர்களிடம் வழங்கவேண்டும்.
மேற்கண்டவாறு செய்யாவிட்டால் புதுச்சேரி நகராட்சிகள் சட்டம் 1973 மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016-ன்படி சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story