மன்னார்குடியில் ரூ.60 ஆயிரம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை


மன்னார்குடியில் ரூ.60 ஆயிரம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 July 2019 4:30 AM IST (Updated: 26 July 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர், பயன்படுத்துவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், பிரபாகரன் மற்றும் அதிகாரிகளை கொண்ட கடந்த 2 நாட்களாக மன்னார்குடி பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மன்னார்குடி நகராட்சி ஆணையர் இளங்கோவன், நகர்நல அலுவலர் டாக்டர் சந்திரசேகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது நகராட்சி ஆணையர் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது, பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

எனவே தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை நடைபெற்ற சோதனையின்போது ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து சோதனைகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story