வேதாரண்யத்தில் பள்ளி வேன்-ஆட்டோ மோதல் மாணவ-மாணவிகள் உள்பட 9 பேர் காயம்
வேதாரண்யத்தில் பள்ளி வேன்-ஆட்டோ மோதி கொண்ட விபத்தில் மாணவ-மாணவிகள் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அண்டர்காட்டில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு சொந்தமான வேனில் நேற்று காலை மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளி அருகே சென்ற போது அந்த வழியாக மாணவ-மாணவிகளை ஏற்றி கொண்டு வந்த ஆட்டோவும், பள்ளி வேனும் மோதி கொண்டன.
இதில் ஆட்டோவில் வந்த ஆதவன், கனிஷ்கா, ஆர்த்திகா, தாரணி, ரஷிகா, கிஷோர், ராகுல், சர்னி ஆகிய 8 மாணவ-மாணவிகள் மற்றும் ஆட்டோ டிரைவர் வைத்தியநாதன் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 9 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மாணவ- மாணவிகள் 8 பேரை நாகை அரசு மருத்துவமனைக்கும், ஆட்டோ டிரைவர் வைத்தியநாதனை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
பாதிக்கப்பட்ட குழந்்தைகளையும் அவரது பெற்றோர்களையும் அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் வந்து பார்வையிட்டு தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

Related Tags :
Next Story