திருவள்ளூர் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்
திருவள்ளூர் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு விநாயகபுரத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 38). இவர் அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை நந்தகுமார் தனது தாயார் லோகம்மாள் (55) உடன் கடைக்கு சென்றார். மதியம் சாப்பிடுவதற்காக லோகம்மாள் தன் வீட்டுக்கு சென்றார்.
அவர் வீட்டுக்கு சென்ற போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது அந்த வீட்டிற்குள் ஒரு நபர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
லோகம்மாளை கண்ட அந்த நபர் அவரை தாக்கி தள்ளி விட்டு வீட்டில் இருந்து தப்பி ஓட முயன்றார். அவர் கையில் நகை மற்றும் பணம் இருந்தது. இதை கண்ட லோகம்மாள் திருடன் திருடன் என கூச்சலிட்டவாறு அந்த வாலிபரை பின்தொடர்ந்து சென்றார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தப்பி ஓட முயன்ற நபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர் அவரை அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் கட்டி வைத்து செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட கொள்ளையனை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அந்த நபர் திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரை சேர்ந்த வேங்கை (25) என்பது தெரியவந்தது.
அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம், 10 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து அவரிடம் இது தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story