குளித்தலை பகுதியில் குளங்கள் தூர்வாரும் பணிகள் தீவிரம்


குளித்தலை பகுதியில் குளங்கள் தூர்வாரும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 26 July 2019 4:15 AM IST (Updated: 26 July 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை பகுதியில் குளங்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள மருதூர் பேரூராட்சி பகுதியில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாருதல், மரக்கன்று நடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட கருங்கல்பட்டியில் இரண்டே கால் ஏக்கர், குப்புரெட்டிப்பட்டியில் 1 ஏக்கர் என இவ்வூர்களில் உள்ள 2 குளங்கள் தூர்வாரப்பட்டு மழைக்காலங்களில் நீர் சேமிக்க சிமெண்டிலான உறைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்றுள்ளது.

இந்த 2 குளங்களை சுற்றி இருபுறமும் 500 பனைவிதைகளும், 100 மரக்கன்றுகளும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் மருதூர், வீராம்பூர், மேட்டு மருதூர் ஆகிய ஊர்களின் சாலை ஓரங்களில் பனைவிதைகள் நடப்பட்டுள்ளது.

3 ஆயிரம் பனை விதைகள்

இப்பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் முதல்கட்டமாக குளங்கள், சாலை ஓரங்களில் மட்டும் பனைவிதைகளும், மரக்கன்றுகளும் நடப்பட்டு வரப்படுவதாகவும், தொடர்ந்து இப் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 3 ஆயிரம் பனை விதைகள், மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிராமமூர்த்தி தெரிவித்தார். இப்பணிகளை பேரூராட்சி இளநிலை உதவியாளர் சேட், சுகாதார மேற்பார்வையாளர் பாக்கியம் மற்றும் அலுவலர்கள் மேற்பார்வையிட்டனர்.

Next Story