வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்: 2 மீனவர்கள் பலி தூத்துக்குடி அருகே பரிதாபம்
தூத்துக்குடி அருகே வேன் -மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 மீனவர்கள் பலியானார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் நிகோலஸ் தெருவை சேர்ந்தவர் சார்லஸ். இவருடைய மகன் செல்வம் என்ற ஜெயபிரகாஷ் (வயது 37). தாளமுத்துநகரில் உள்ள பாரதிநகரை சேர்ந்தவர் கணேசன் மகன் வேல்முருகன் (20). இவர்கள் 2 பேரும் மீனவர்கள்.
நேற்று மாலையில் 2 பேரும் தருவைகுளத்தில் இருந்து சமத்துவபுரம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென் றனர். மோட்டார் சைக்கிளை செல்வம் ஓட்டினார். பின்னால் வேல்முருகன் அமர்ந்து இருந்தார்.
அப்போது ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி ஒரு வேன் வந்தது. அந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த செல்வம், வேல்முருகன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத் தில் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இதுகுறித்து உடனடியாக தருவைகுளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தருவைகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தருவைகுளம் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக வேனை ஓட்டி வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் (40) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 மீனவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story