மாவட்ட செய்திகள்

கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி பெண் பலி + "||" + Near Kotagiri Attacking the wild Woman kills

கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி பெண் பலி

கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி பெண் பலி
கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி பெண் பலியானார்.
கோத்தகிரி,

கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட மிளிதேன் பகுதியை சேர்ந்தவர் சுப்பன். இவருடைய மனைவி பொன்னியம்மாள். இவர்களது மகள் பேபி(வயது 42). திருமணம் ஆகவில்லை. பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளி. இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அதே பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் பேபி ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு புதர் மறைவில் இருந்து திடீரென காட்டெருமை ஒன்று வெளியே வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேபி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் அவரை காட்டெருமை முட்டி தாக்கியது. காட்டெருமையின் கொம்புகள் குத்தி கிழித்ததில், பேபியின் மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் காட்டெருமையை கூச்சலிட்டு விரட்டிவிட்டு, பேபியை மீட்டனர்.


இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பேபி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனவர் சக்திவேல் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா நேரில் சென்று, பேபியின் தாயாருக்கு ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து அரசின் முதற்கட்ட நிவாரண தொகையான ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் சம்பவம் நடந்த தேயிலை தோட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மிளிதேன் பகுதியில் காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது, குறிப்பாக அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிகின்றன, இதனால் மாணவ-மாணவிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது, எனவே அந்த பள்ளியை சுற்றி பாதுகாப்புக்காக கம்பி வேலி அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பின்னர் அவர் கூறியதாவது:-

காட்டெருமை தாக்கி இறந்த பேபியின் தாயார் பொன்னியம்மாளுக்கு அரசின் ஓய்வூதியம் மாதந்தோறும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளியை சுற்றிலும் கம்பி வேலி அமைக்க வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ள காட்டெருமைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்படும். மேலும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் கரடிகள் கூண்டு வைத்து பிடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை