வேலம்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ரூ.7 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் பிரபாகர் வழங்கினார்


வேலம்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ரூ.7 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் பிரபாகர் வழங்கினார்
x
தினத்தந்தி 27 July 2019 4:45 AM IST (Updated: 26 July 2019 11:25 PM IST)
t-max-icont-min-icon

வேலம்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ. 7 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி 42 பயனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்து 7 ஆயிரத்து 782 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:- ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொள்ளும் வகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி தற்போது நடந்த முகாமில் பொதுமக்களிடம் பசுமை வீடு, பிரதமர் வீடு வழங்கும் திட்டம், வீட்டு மனை பட்டா, விலையில்லா ஆடு வழங்கும் திட்டம், பள்ளி சுற்றுச்சுவர், குடிநீர் வசதி, ஏரி கால்வாய் அமைத்தல் குறித்து பொதுமக்கள் மனு அளித்துள்ளர்கள். இந்த மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய மாநில அரசுனுடைய ஜல் சக்தி அபியான் (நீர் மேலாண்மை இயக்கம்) திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள ஏரி குளம், குட்டைகள் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் நிலத்தடி நீரை சேமித்து நீர் மட்டத்தை உயர்த்த வழிவகை ஏற்படுகிறது. பொதுமக்கள் தங்களது இல்லங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் பண்ணை குட்டைகள் அமைத்து நிலத்தடி நீரை பெருக்க ஒத்துழைக்க வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பிரதீப்சிங், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் மனோகரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குணசேகரன், தாட்கோ மேலாளர் பி.டி.சுந்தரம், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், உதவி ஆணையர் (ஆயம்) முரளி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story