திருவள்ளூர் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு; 2 பேர் கைது


திருவள்ளூர் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 July 2019 3:30 AM IST (Updated: 27 July 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே பெண்ணிடம் நகை பறித்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் மனோகரன். ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி தேவகி (வயது58). நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வேலையின் காரணமாக திருவள்ளூருக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வேலையை முடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வேப்பம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

கிருஷ்ணா கால்வாய் அருகே வந்து கொண்டிருந்தபோது தேவகி அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு மோட் டார் சைக்கிளில் மர்மநபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் பெண்ணிடம் நகை பறித்ததாக செங்குன்றத்தை சேர்ந்த மாணிக்கம் (23), ஸ்டீபன்ராஜ் (21) ஆகியோரை கைது செய்து இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Next Story