பள்ளிபாளையம் அருகே தண்டவாளத்தில் டிரைவர் பிணம்
பள்ளிபாளையம் அருகே தண்டவாளத்தில் டிராக்டர் டிரைவர் பிணம் கிடந்தது. செல்போன் பேசியபடி சென்றபோது ரெயில்மோதி அவர் இறந்தாரா? என்பது பற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 20). இவர் பாட்டி வீட்டில் தங்கி இருந்து டிராக்டர் டிரைவராக வேலைபார்த்து வந்தார். கார்த்தி நேற்று முன்தினம் காலை ஆலாம்பாளையம் பேரூராட்சி அருகே ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
அருகில் மோட்டார்சைக்கிள் கிடந்தது. கார்த்தியின் காதில் செல்போனின் ஹெட்போன் மாட்டப்பட்டு இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கார்த்தி காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு செல்போன் பேசியபடி மோட்டார்சைக்கிளில் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில்மோதி இறந்தாரா? அல்லது அவருடைய சாவுக்கு வேறு காரணம் உண்டா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு கார்த்தியின் தந்தை சேகரும் இதே இடத்தில் ரெயில் மோதி இறந்தார். இதேபோல் கார்த்தி உடலும் இந்த பகுதியில் கிடந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story