குடிமராமத்து திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்த தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ள நடவடிக்கை
குடிமராமத்து திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்த தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.
புதுக்கோட்டை,
முதல்-அமைச்சரின் குடி மராமத்து திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் பதிவு செய்யப்பட்ட பாசனதாரர் சங்கத்தினருக்கான சிறப்பு முகாம், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் உதவி பொறியாளர் உமாசங்கர், வங்கி அலுவலர்கள், வணிகவரித்துறை அலுவலர்கள் மற்றும் பாசனதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
குடிமராமத்து பணிகளானது பதிவு செய்யப்பட்ட பாசனதாரர்கள் சங்கம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியை சிறந்த முறையில் செயல்படுத்தும் வகையில் மேற்கண்ட சங்கங்கள் கூட்டு வங்கி கணக்கு தொடங்குதல், பான் எண் பெறுதல், ஜி.எஸ்.டி. எண் பெறுதல் ஆகியவை தொடர்பான சிறப்பு முகாம்கள் மாவட்டந்தோறும் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 46 பாசனதாரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதேபோல் பாசன தாரர்களுக்கு முதல்- அமைச்சரின் குடிமராமத்து திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story