மாவட்ட செய்திகள்

திருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு, பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி - சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது + "||" + From Thiruvarur to Villupuram, For a public utility project 1,250 ton rice

திருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு, பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி - சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

திருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு, பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி - சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
திருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு பொதுவினியோக திட்டத்திற்காக சரக்கு ரெயிலில் 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள் முதல் செய்யப்பட்டது. இந்த நெல், மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி திருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் 91 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் அரிசி மூட்டைகளை ஏற்றினர். இதை தொடர்ந்து அரிசி மூட்டைகளுடன் சரக்கு ரெயில் விழுப்புரத்திற்கு புறப்பட்டு சென்றது.