திருப்பூர்-பல்லடம் சாலையில் மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவர்கள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு
திருப்பூர்-பல்லடம் சாலையில் மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வீரபாண்டி,
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மடிக்கணினி வழங்கக்கோரி பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் உள்ளிட்ட செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 முன்னாள் மாணவ-மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் மடிக்கணினி வழங்கக்கோரி நேற்று பல்லடம் சாலை டி.கே.டி. பஸ் நிறுத்தம் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பல்லடம் சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வீரபாண்டி போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்பு அனைவரையும் அப்புறப்படுத்தினர்.
பின்னர் மாணவர்கள் ஒன்று கூடி தங்கள் குறைகளை எழுத்துபூர்வமாக எழுதி கொடுத்ததோடு மேற்கொண்டு திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்திக்குமாறு போலீசார் அறிவித்து சமரசம் செய்தனர். இதனால் சமரசம் அடைந்த மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் கணபதிபாளையம் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தாவிடம், தங்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, உங்களுக்கான மடிக்கணினிகள் இன்னும் 2 மாதத்துக்குள் வந்துவிடும் என்று அரசு தெரிவித்துள்ளது. எனவே அவை வந்தவுடன் உங்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்றார். இதுபோல் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த 20-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் தலைமையாசிரியை ஸ்டெல்லாவை சந்தித்து மடிக்கணினி வழங்க கோரி முதன்மை கல்வி அதிகாரியிடம் வழங்க கோரி அவரிடம் மனு கொடுத்தனர்.

Related Tags :
Next Story