மாவட்ட செய்திகள்

எடியூரப்பாவின் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் பங்கேற்பு + "||" + Yeddyurappa's swearing in ceremony   Congress dissatisfied MLA Roshan Baek participation

எடியூரப்பாவின் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் பங்கேற்பு

எடியூரப்பாவின் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் பங்கேற்பு
கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நேற்று அமைந்தது.
பெங்களூரு, 

கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றுக் கொண்டார். இந்த பதவி ஏற்பு விழாவில் சிவாஜிநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ரோஷன் பெய்க் கலந்துகொண்டார். இவர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் பா.ஜனதாவில் சேர தயாராக இருப்பதாகவும் ஏற்கனவே ரோஷன் பெய்க் தெரிவித்திருந்தார். பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்ட ரோஷன் பெய்க், எடியூரப்பாவுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் விழாவுக்கு வந்திருந்த பா.ஜனதா தலைவர்களை ரோஷன் பெய்க் சந்தித்து பேசிய வண்ணம் இருந்தார்.

இதுபோல, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான ராஜண்ணாவும் பதவி ஏற்பு விழாவுக்கு வந்திருந்தார். அவரும் எடியூரப்பாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.