அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் பணிக்கு 142 பெண்கள் தேர்வு
அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் பணிக்கு 142 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை,
மராட்டிய மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 4 ஆயிரத்து 500 பெண் நடத்துனர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் பெண் டிரைவர்கள் ஒருவர் கூட இல்லை. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெண்களும் டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாநில போக்குவரத்து கழகம் அறிவித்து இருந்தது.
இதையடுத்து 932 பெண்கள் டிரைவர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் 743 பேர் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றனர். இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி மற்றும் மருத்துவ சோதனை நடந்தன. இதில் 142 பெண்கள் அரசு பஸ் டிரைவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘டிரைவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு 1 ஆண்டு பயிற்சி வழங்கப்படும்.
அதன்பிறகு அவர்களுக்கு பணி ஒதுக்கப்படும்’’ என் றார். டிரைவர் பணிக்கு தேர்வான பெண்களில் பெரும்பாலானவர்கள் மும்பை மற்றும் அதையொட்டி உள்ள நகர்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் ஒரு சில பட்டதாரிகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story