மும்பை காங்கிரஸ் செயல் தலைவராக ஏக்நாத் கெய்க்வாட் நியமனம்
மும்பை காங்கிரஸ் செயல் தலைவராக ஏக்நாத் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோராவும் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்தநிலையில் சமீபத்தில் மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகிப் தோரட் நியமிக்கப்பட்டார். மும்பை தலைவர் நியமனத்தில் இழுபறி நிலவி வந்தது.
இந்தநிலையில் மும்பை காங்கிரஸ் செயல் தலைவராக முன்னாள் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார். மிலிந்த் தியோராவின் பரிந்துரையின் பேரில் தான் கட்சியின் மும்பை செயல் தலைவராக ஏக்நாத் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2 முறை எம்.பி.யான ஏக்நாத் கெய்வாட் 2014 மற்றும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்மத்திய மும்பை தொகுதியில் சிவசேனாவின் ராகுல் செவாலேவிடம் தோல்வி அடைந்தவர் ஆவார்.
Related Tags :
Next Story