வரி உயர்வுக்கு எதிர்ப்பு: நிலக்கோட்டை வாரச்சந்தையில் கடைகள் வைக்காமல் வியாபாரிகள் போராட்டம்
வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலக்கோட்டை வாரச்சந்தையில் கடைகள் வைக்காமல் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை நிலக்கோட்டை- அணைப்பட்டி சாலையில் உள்ளது. இந்த வாரச்சந்தை வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும். இந்த வாரச்சந்தைக்கு நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி தலைமையில் ஏலம் நடத்தப்பட்டது.
வேடசந்தூர் தாலுகா குளத்தூரை சேர்ந்த மோகன்ராஜ் ரூ.46 லட்சத்துக்கு வாரச்சந்தையை ஏலம் எடுத்தார். இதைத்தொடர்ந்து கடந்த வாரம் மோகன்ராஜ் தரப்பினர் வரிவசூல் செய்தனர். அப்போது வழக்கத்தை விட கூடுதலாக வரி வசூல் செய்வதாக கூறப்படுகிறது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து வாரச்சந்தை வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கடைகள் வைக்காமல் புறக்கணித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கமாக சனிக்கிழமை காலை 6 மணிக்கு வாரச்சந்தை கூடும். ஆனால் யாரும் கடைகள் வைக்காததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வியாபாபரிகள் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாரன் தலைமையில் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூடுதலாக வரி வசூல் செய்தால் அதை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதையடுத்து மாலையில் சிலர் கடைகளை வைத்தனர்.
இதுகுறித்து நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி கூறுகையில், ‘தற்போது ஏலம் எடுத்தவர்கள் நிலக்கோட்டை பேரூராட்சி ஏல விதிகளின் அடிப்படையில் முறையாக ரசீது அடித்து கொடுத்துத்தான் வசூல் செய்கிறார்கள். எந்த விதமான முரண்பாடும் இல்லை என்றார்.

Related Tags :
Next Story