அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தஞ்சையில் நடந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பு கூட்டம் தஞ்சை மேலவீதியில் உள்ள தியாகிகள் இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆப்ரஹாம்ராய் மணி, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா, தமிழக இளைஞர் காங்கிரஸ் செயலாளர் அபிஷேக் மோசஸ், மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வட்டார தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட, மாநகர நிர்வாகிகள் ராமநாதன், செந்தில் பழனிவேல், அலாவுதீன், மணிவண்ணன், பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் தஞ்சை மாநகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் வரவேற்று பேசினார். இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகளாக யாதவகிருஷ்ணன், மாணிக்கவாசகம், வீரையன், சஞ்சய்காந்தி, ரமேஷ், அறிவழகன் உள்பட பலர் பொறுப்பேற்றுக்கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
விவசாய கடன்கள் தள்ளுபடி
கூட்டத்தில், கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசு உடனடியாக விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், ஆறுகள், வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் இளைஞர் காங்கிரசுக்கு அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story