கடையநல்லூர் பகுதியில் குடிமராமத்து பணியை கலெக்டர் ஷில்பா ஆய்வு
கடையநல்லூர் பகுதியில் நடைபெறும் குடிமராமத்து பணியை கலெக்டர் ஷில்பா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெல்லை,
குடிமராமத்து திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தாலுகா கொடிக்குறிச்சி கிராமத்தில் உள்ள ராஜாவின்குளத்தில் ரூ.53 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சுற்றுப்புற சுவர் அமைத்து கண்மாயை சீரமைத்து குளம் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் ஷில்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணியை செப்டம்பர் மாதத்துக்குள் முடித்திடும்படி அவர் அறிவுறுத்தினார்.
நயினாநகரம் கிராமத்தில் தெற்குமறிச்சிக்கட்டி குளத்தில் ரூ.57 லட்சத்தில் நடைபெறும் புனரமைப்பு பணியையும், ஆய்குடி கிராமத்தில் நல்ல தண்ணீர் பெட்டை குளத்தை ரூ.30 லட்சத்தில் குடிமராமத்து செய்யும் பணியையும் பார்வையிட்டு, அவற்றின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் எடுத்துக்கூறினார்.
பின்னர் கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், பல கோடி ரூபாயில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். நெல்லை மாவட்டத்தில் 185 பணிகளை மேற்கொள்ள ரூ.42 கோடியே 38 லட்சம் ஒதுக்கீடு செய்து உள்ளார். அதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள குளம், ஏரி, நீர்நிலைகளில் விவசாயிகளை கொண்டு குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை கண்காணிக்க உதவி கலெக்டர் நிலையிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முழுமையான பதிவுபெற்ற பாசனசபை விவசாயிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதி விவசாயிகளின் நலனை அடிப்படையாக கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மழைக்காலத்துக்கு முன்பாக பணிகள் நடைபெறுவதால் மழைக்காலத்தில் தண்ணீரை முழுமையாக சேமிக்க இயலும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ஆய்குடி பேரூராட்சியில் 100 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜா, உபகோட்ட பொறியாளர் சங்கர்ராஜா, உதவி பொறியாளர் கிருஷ்ணன், தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார், தாசில்தார் அழகப்பராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story