பகுஜன் சமாஜ்வாடி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பகுஜன் சமாஜ்வாடி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 July 2019 4:00 AM IST (Updated: 28 July 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட பகுஜன் சமாஜ்வாடி கட்சி சார்பில் நேற்று மாலை பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர்,

புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட பகுஜன் சமாஜ்வாடி கட்சி சார்பில் நேற்று மாலை பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். கட்சியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வினோத், வேப்பூர் ஒன்றிய தலைவர் ரகுபதி, செயலாளர் கரும்பாயிரம், முன்னாள் மாவட்ட தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்சியின் மாநில செயலாளரும், மூத்த வக்கீலுமான காமராசு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சியின் மாவட்ட மகளிர் அணி தலைவர் அமுதா, இளைஞரணி தலைவர் இளவரசன், மாணவரணி தலைவர் கண்ணதாசன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story