தேசியவாத காங்கிரசை சேர்ந்த வைபவ் பிச்சாத் எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் இணையப்போவதாக அறிவிப்பு


தேசியவாத காங்கிரசை சேர்ந்த வைபவ் பிச்சாத் எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் இணையப்போவதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 28 July 2019 5:28 AM IST (Updated: 28 July 2019 5:28 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கட்சி தாவலில் ஈடுபடுவது அந்த கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

அகமத்நகர், 

தேசியவாத காங்கிரஸ்  கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சச்சின் அஹிர் சமீபத்தில் திடீரென ஆளும் கட்சியில் அங்கும் வகிக்கும் சிவசேனா கட்சியில் இணைந்தார்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநில மத்திரியுமான மதுகர் பிச்சாத்தின் மகன் வைபவ் பிச்சாத் எம்.எல்.ஏ. தான் விரைவில் பா.ஜனதாவில் இணையப்போவதாக நேற்று அறிவித்தார்.

Next Story