கிள்ளையில் இறால் பண்ணைகளை அகற்றாவிட்டால் போராட்டம்


கிள்ளையில் இறால் பண்ணைகளை அகற்றாவிட்டால் போராட்டம்
x
தினத்தந்தி 28 July 2019 3:00 AM IST (Updated: 28 July 2019 5:55 AM IST)
t-max-icont-min-icon

கிள்ளையில் இறால் பண்ணைகளை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அரசியல் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பரங்கிப்பேட்டை, 

கிள்ளையில் அரசியல் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சசிகுமார், விடுதலை சிறுத்தை கட்சி ராமதாஸ், விசுவநாதன். தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கலா, கிருஷ்ணணமூர்த்தி, சாந்தகுமார் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

கிள்ளை பேரூராட்சி பக்கிங்காம் கால்வாய் பகுதியில் உள்ள இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதனால் சுற்றியுள்ள 10 கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இறால் பண்ணைகளை அகற்றாவிட்டால் கிள்ளை மற்றும் சுற்றியுள்ள 10 கிராம மக்களை ஒன்று திரட்டி பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story