மதுக்கடை ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.1¾ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கும்பகோணம் அருகே மதுக்கடை ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.1¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பாபநாசம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள இளங்கார்குடி கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது50). இவர் திருப்பாலைத்துறை டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வழக்கம்போல் மதுக்கடையை பூட்டினார்.
பின்னர் கடையில் இருந்து ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அவர் பணத்தின் ஒரு பகுதியை தனது கால்சட்டை பாக்கெட்டிலும், மற்ற பணத்தை மோட்டார் சைக்கிளின் பெட்டியிலும் வைத்திருந்தார். பாபநாசம் படுகை புதுத்தெரு அரசலாற்று பாலம் முனியாண்டவர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் 3 பேர், அவரை வழிமறித்தனர்.
அவர்கள் சிவராமனை திடீரென சரமாரியாக தாக்கி, அரிவாளால் அவருடைய தலையில் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். பின்னர் அந்த 3 பேரும் மோட்டார் சைக்கிளின் பெட்டி மற்றும் சிவராமனின் கால்சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். அரிவாள் வெட்டு மற்றும் தாக்குதலில் படுகாயம் அடைந்த சிவராமனை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிவராமனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன், இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், அன்பழகன், ஏட்டு மதியழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக சிவராமன் பாபநாசம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சிவராமனை அரிவாளால் வெட்டி, ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
தனிப்படை போலீசார் கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மதுக்கடை ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story