ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அனைத்து கட்சி கூட்டம் கோட்டூர் அருகே நடந்தது
கோட்டூர் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
கோட்டூர்,
கோட்டூர் அருகே புழுதிக்குடி ஊராட்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் அனுமதியின்றி செயல்படும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் சோழங்கநல்லூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் சேகர் தலைமை தாங்கினார். தி.மு.க. ஊராட்சி செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, கூட்டுறவு சங்க தலைவர் சிவசண்முகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
புழுதிக்குடி ஊராட்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் அனுமதியின்றி செயல்படும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் உடனடியாக தடை செய்து, துளை போடும் துப்பரன கருவி கோபுரத்தை அகற்ற வேண்டும். நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டம்
புழுதிக்குடி ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், கச்சா எண்ணெய் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது.
60 பேர் கொண்ட போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து போராட்டக்குழு முடிவு செய்யும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story