கோபி அருகே டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது
கோபி அருகே டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது.
கடத்தூர்,
கோபி அருகே வேட்டைக்காரன்கோவிலில் துணை மின்நிலையம் உள்ளது. இங்கு 110 கிலோ வாட் திறன் கொண்ட மின்கருவி உள்ளது. இங்கிருந்து கோபி, மொடச்சூர், கரட்டூர் மேடு, நாயக்கன்காடு உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் மின்வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மின்கருவியில் இருந்து திடீரென புகை வந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மின்வாரிய ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலில் மின்இணைப்பை துண்டித்தனர்.
பின்னர் இதுபற்றி கோபி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று நுரை கலவை என்ற ரசாயன மருந்தை பீச்சியடித்து மின்கருவியில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. மின்கருவியில் உள்ள பிரேக்கர் என்ற ஆயில் அதிக வெப்பமானதே தீ விபத்துக்கு காரணம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மின்கருவியில் ஏற்பட்ட வெப்பத்தை சரிசெய்தனர். அதன்பின்னரே அந்த பகுதியில் மின்வினியோகம் வழங்கப்பட்டது. இதனால் சுமார் 2½ மணிநேரம் மின்தடை ஏற்பட்டது.

Related Tags :
Next Story