வரதட்சணை கொடுமையால் மனைவி தீக்குளிப்பு: நகைக்கடை உரிமையாளர், தந்தையுடன் கைது
திருவாரூரில் வரதட்சணை கொடுமையால் மனைவி தீக்குளித்த வழக்கில் அவருடைய கணவரான நகைக்கடை உரிமையாளர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் அருகே உள்ள மருதப்பட்டினத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகன் அருண்(வயது 38). இவர் திருவாரூர் எல்லையம்மன் கோவில் தெருவில் நகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும், திருவாரூர் அருகே உள்ள பருத்தியூரை சேர்ந்த மைதிலி(29) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் மைதிலி கடந்த சில நாட்கள் முன்பு தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் மைதிலி்யை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் மைதிலி அளித்த வாக்குமூலத்தில் தன்னை வரதட்சணை கேட்டு அருண் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் கொடுமை செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் வைப்பூர் போலீசார், மைதிலியின் கணவர் அருண், மாமனார் இளங்கோ ஆகியோர்் மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Related Tags :
Next Story