திருப்பூர் சந்திராபுரத்தில் அனுமதியின்றி கொடிக்கம்பம் வைக்கப்பட்டதால் பிரச்சினை; இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு
திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் அனுமதியின்றி கொடிக்கம்பம் வைக்கப்பட்ட பிரச்சினை தொடர்பாக இந்து முன்னணியினர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் சந்திராபுரம், இந்திராநகர் பகுதியில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் கொடிக்கம்பங்கள் ஏற்கனவே நடப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று இரவோடு, இரவாக ஒரு தரப்பினர் அந்த கொடிக்கம்பங்களுக்கு அருகிலேயே தங்கள் கொடிக்கம்பத்தை நட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்த தகவல் அறிந்து அந்த பகுதியில் உள்ள இந்து முன்னணியை சேர்ந்த ஏராளமானோர் நேற்று காலையில் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும், உடனடியாக குறிப்பிட்ட அந்த கொடிக்கம்பத்தை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் விரைவில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வர இருப்பதால், கொடிக்கம்பத்தை உடனடியாக அந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கொடிக்கம்பத்தை நட்டவர்கள் குறித்தும், அந்த பகுதியில் உள்ளவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த திருப்பூர் ஊரக போலீஸ் நிலையத்திற்கு வரும்படி இருதரப்பினருக்கும் போலீசார் அழைப்பு விடுத்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஒருதரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்காக யாரும் வரவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்திற்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பூர் தெற்கு உதவி கமிஷனர் நவீன்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அனுமதியின்றி கொடிக்கம்பத்தை நட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அங்கு கூடியிருந்தவர்களிடம் உறுதியளித்தார்.
இருப்பினும் விரைவில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வர இருப்பதால், கொடிக்கம்பத்தை உடனடியாக அந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கொடிக்கம்பத்தை நட்டவர்கள் குறித்தும், அந்த பகுதியில் உள்ளவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த திருப்பூர் ஊரக போலீஸ் நிலையத்திற்கு வரும்படி இருதரப்பினருக்கும் போலீசார் அழைப்பு விடுத்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஒருதரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்காக யாரும் வரவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்திற்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story