14 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: சபாநாயகரின் முடிவு வரவேற்கத்தக்கது சித்தராமையா சொல்கிறார்
14 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் முடிவு வரவேற்கத்தக்கது என்று சித்தராமையா கூறினார்.
மைசூரு,
சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று(அதாவது நேற்று) காலையில் அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி இருக்கிறார். என்னையும் அந்த கூட்டத்திற்கு அழைத்திருக்கிறார் என்ற தகவல் எனக்கு தாமதமாகத்தான் கிடைத்தது. அவர் என்னை செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு அழைத்திருப்பது குறித்து முன்கூட்டியே எனக்கு தெரியாது. மேலும் எதற்காக என்னை அழைத்தார்?, என்ன விஷயத்திற்காக என்னை அழைத்தார்? என்பதும் எனக்கு தெரியாது.
பா.ஜனதா ஆட்சி அமைத்து, எடியூரப்பா முதல்-மந்திரியாகி இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். முதல்-மந்திரி எடியூரப்பா நாளை(அதாவது இன்று) சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் நிலையில் உள்ளார். ஏற்கனவே காங்கிரசை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டனர்.
இன்று(அதாவது நேற்று) ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் மொத்தம் 14 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சபாநாயகரின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. இதனால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன்காரணமாக எடியூரப்பாவால் எளிதில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று நினைக்கிறேன். இவ்வாறு சித்தராமையா கூறினார்.
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் திடீரென மைசூருவுக்கு குடும்பத்துடன் வந்தார். பின்னர் அவர் மைசூரு ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் தங்கினார். நேற்று சித்தராமையாவின் மூத்த மகனான ராகேசின் 3-ம் ஆண்டு நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்பேரில் சித்தராமையா மூத்த மகன் ராகேசுக்கு நினைவஞ்சலி செலுத்தினார். பின்னர் மைசூரு தாலுகா ஹரி காட்டூர் கிராமத்தில் உள்ள சித்தராமையாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் ராகேசுக்கு புண்ணிய திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்குதான் ராகேசின் சமாதி உள்ளது குறிப்பிடத்தக்கது. புண்ணிய திதி கொடுக்கும் நிகழ்ச்சியில் சித்தராமையாவும், அவருடைய குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். பின்னர் ராகேசின் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அவர் தனது வீட்டில் இருந்து புறப்படும்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று(அதாவது நேற்று) காலையில் அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி இருக்கிறார். என்னையும் அந்த கூட்டத்திற்கு அழைத்திருக்கிறார் என்ற தகவல் எனக்கு தாமதமாகத்தான் கிடைத்தது. அவர் என்னை செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு அழைத்திருப்பது குறித்து முன்கூட்டியே எனக்கு தெரியாது. மேலும் எதற்காக என்னை அழைத்தார்?, என்ன விஷயத்திற்காக என்னை அழைத்தார்? என்பதும் எனக்கு தெரியாது.
பா.ஜனதா ஆட்சி அமைத்து, எடியூரப்பா முதல்-மந்திரியாகி இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். முதல்-மந்திரி எடியூரப்பா நாளை(அதாவது இன்று) சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் நிலையில் உள்ளார். ஏற்கனவே காங்கிரசை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டனர்.
இன்று(அதாவது நேற்று) ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் மொத்தம் 14 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சபாநாயகரின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. இதனால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன்காரணமாக எடியூரப்பாவால் எளிதில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று நினைக்கிறேன். இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story