எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம்: காங்கிரஸ் தலைவர்கள் முடிவுபடி சபாநாயகர் செயல்பட்டுள்ளார் - முனிரத்னா பரபரப்பு குற்றச்சாட்டு
எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த முடிவுபடி சபாநாயகர் செயல்பட்டுள்ளார் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரான முனிரத்னா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,
காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்களை நேற்று சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்திருந்தார். அவர்களில் முனிரத்னாவும் ஒருவர் ஆவார். தகுதி நீக்கம் குறித்து மும்பையில் தங்கியுள்ள முனிரத்னா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராஜினாமா செய்திருந்த எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருப்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான். அதனால் சபாநாயகர் அறிவிப்பால் நாங்கள் அதிர்ச்சி அடையவில்லை. தகுதி நீக்கம் உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளையும் அறிந்து கொண்டே பதவியை ராஜினாமா செய்திருந்தோம்.
ஆனால் எங்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் எடுத்த முடிவு, அவரால் எடுக்கப்பட்டது அல்ல. காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த முடிவு ஆகும். நாங்கள் ராஜினாமா செய்ததும், காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். ராஜினாமா செய்தவர்களின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது, எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறி வந்தனர். இதனை சபாநாயகரிடம் கூறினார்கள். காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த முடிவுபடி, சபாநாயகரும் செயல்பட்டு தகுதி நீக்கம் செய்திருக்கிறார். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய காரணம் காங்கிரஸ் தலைவர்கள் தான். குமாரசாமி முதல்-மந்திரியாக இருப்பது பிடிக்காமல் கூட்டணி அரசை கவிழ்க்க முயன்றனர்.
இதற்காக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எங்களை ராஜினாமா செய்யும்படி தூண்டினார்கள். நாங்களும் பதவியை ராஜினாமா செய்தோம். தற்போது கூட்டணி ஆட்சியை கவிழ்த்தது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தான் என்று எங்கள் மீது பழிபோட்டு விட்டு காங்கிரஸ் தலைவர்கள் தப்பித்து கொள்வார்கள். எங்களை ராஜினாமாவுக்கு தூண்டிய காங்கிரஸ் தலைவர்கள் யார்? என்பதை பெங்களூருவுக்கு வந்து கூட்டாக பேட்டி அளிக்கும் போது தெரிவிக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு மீது நம்பிக்கை உள்ளது. அங்கு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு முனிரத்னா கூறினார்.

Related Tags :
Next Story