கேபிள் டி.வி.யை அரசே ஏற்று நடத்த வேண்டும் - பாரதீய ஜனதா வலியுறுத்தல்
கேபிள் டி.வி.யை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி,
பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் பொதுமக்களிடம் கேபிள் டி.வி. மாத கட்டணம் ரூ.250 வசூல் செய்யப்பட்டு வருகிறது. இக்கட்டணம் பிற மாநிலங்களில் வசூலிக்கும் கட்டணத்தைவிட 2 மடங்கு அதிகமாகும். தற்போது தமிழ்நாட்டில் கேபிள் டி.வி.க்காக தனி ஆணையம் அமைக்கப்பட்டு கேபிள் டி.வி.யை அரசே ஏற்று நடத்தி வருகிறது. ஆனால் புதுச்சேரியில் அனைத்து தரப்பு மக்களும் கேபிள் டி.வி. கட்டணத்தால் பாதிக்கப்படுகின்றனர். மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 5 லட்சம் கேபிள் டி.வி. இணைப்புகள் உள்ளன. இதன் மூலம் 10 வருடங்களாக அரசுக்கு எந்தவித வரியும், வருமானமும் கிடைப்பதில்லை.
பல்வேறு பிரச்சினைகள் உள்ள கேபிள் டி.வி.யை புதுச்சேரி அரசே தனி ஆணையம் அமைத்து அரசு கேபிள் டி.வி. நிறுவனமாக திறம்பட நடத்த வேண்டும். தற்போது வசூலிக்கும் கட்டணத்தை விட குறைவான கட்டணத்தை அமல்படுத்த வேண்டும். மக்களுக்கு செட்டாப் பாக்ஸ்-ஐ இலவசமாக வழங்கவேண்டும்.
பல வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் போலியான பில்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். நிர்வாக திறனற்ற அரசால் ஒட்டுமொத்த புதுச்சேரியும் பாதிக்கப்படுகிறது. வணிக வரித்துறை ஆணையருக்கு கூடுதலான துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆகையால் கடந்த 3 மாதமாக ஒட்டுமொத்த நிர்வாகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. உடனே அனைத்து வணிக நிறுவனத்திலும் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story