மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரை வழிமறித்து தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மறியல்
மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரை வழிமறித்து தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பங்கூரில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியூர்,
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள பங்கூரில் உள்ள கங்கையம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி இரவில் கோவில் அருகே தெருக்கூத்து நடந்தது. பங்கூர் காலனி பகுதியைச் சேர்ந்த வாலிபர் மணிமாறன் (வயது 24) தெருக்கூத்து பார்ப்பதற்காக சென்றார்.
அப்போது அங்கிருந்த சிலருக்கும், மணிமாறனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் வாலிபர் மணி மாறன் தாக்கப்பட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வில்லியனூர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே பங்கூர் கிராமத்தைச் சேர்ந்த என்ஜினீயர் முத்துப்பாண்டி நேற்று தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம்-புதுச்சேரி மெயின் ரோட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் பங்கூர் காலனி அருகே சென்றபோது அவரை சிலர் வழிமறித்து சரமாரியாக தாக்கினார்கள். இதில் முத்துப்பாண்டி பலத்த காயம் அடைந்தார்.
அவர் சிகிச்சைக்காக அரியூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முத்துப்பாண்டி தாக்கப்பட்ட தகவல் பங்கூர் கிராமத்தில் பரவியதும் கிராம மக்கள் ஆத்திரம் அடைந்தனர். முத்துப்பாண்டியை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் புதுச்சேரி-விழுப்புரம் மெயின்ரோட்டில் பங்கூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அந்த வழியாக நடைபெற்ற போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
இந்த மறியல் பற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தாக்குதல் குறித்து முறைப்படி புகார் தெரிவிக்கும்படியும், அதன்பேரில் விசாரணை நடத்தி முத்துப்பாண்டியை தாக்கியவர்களை கைது செய்வதாகவும் போலீசார் உறுதி அளித்தனர்.
அதனை ஏற்று கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் முத்துப்பாண்டியை தாக்கியவர்கள் மீது வில்லியனூர் போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story