புனே அருகே சோகம் மகன், 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை


புனே அருகே சோகம் மகன், 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை
x
தினத்தந்தி 29 July 2019 3:45 AM IST (Updated: 29 July 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

புனே அருகே மகன், 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புனே,

புனே அருகே போசரி பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (வயது29). இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். இந்தநிலையில், கடந்த 2 நாட்களாக அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவை பாத்திமா திறக்கவில்லை. இதையடுத்து அவர்கள் பிம்பிரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டுக்குள் பாத்திமாவும், அவளது பிள்ளைகளும் பிணமாக கிடந்தனர். இதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், பாத்திமா தனது பிள்ளைகளை கொன்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும் என்ன காரணத்துக்காக பிள்ளைகளை கொன்று இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 பிள்ளைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story