தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கையெழுத்து இயக்கம்
தூத்துக்குடியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
தூத்துக்குடி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து ஒரு கோடி கையெழுத்து இயக்கம் மற்றும் 5 ஆயிரம் தெருமுனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தூத்துக்குடியில் நேற்று காலை கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் தேசிய கல்வி கொள்கை குறித்து விளக்கி கூறி, கையெழுத்து பெற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட குழு உறுப்பினர்கள் குமாரவேல், சங்கரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story