கடற்படையில் மாலுமி பணிக்கு 400 பேர் சேர்ப்பு


கடற்படையில் மாலுமி பணிக்கு 400 பேர் சேர்ப்பு
x
தினத்தந்தி 29 July 2019 3:47 PM IST (Updated: 29 July 2019 3:47 PM IST)
t-max-icont-min-icon

இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது மாலுமி (செய்லர் ஏப்ரல் 2020) என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் 400 இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இவர்கள் 1-4-2000 மற்றும் 31-3-2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் மெட்ரிக் கல்வி (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, உடல்உறுதித் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேவையான இடத்தில், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 1-8-2019-ந் தேதி. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி: //www.joinindiannavy.gov.in

Next Story