விமான பொறியியல் நிறுவனம்


விமான பொறியியல் நிறுவனம்
x
தினத்தந்தி 29 July 2019 4:59 PM IST (Updated: 29 July 2019 4:59 PM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் கீழ் செயல்படும் துணை நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

என்ஜினீயர்கள் மற்றும் பைலட் லைசென்சு பெற்றவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக ஏ.ஐ.இ.எஸ்.எல். (AIESL) என அழைக்கப்படுகிறது.

தற்போது இந்த நிறுவனத்தில் ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் என்ஜினீயர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 125 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேரடி நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி யுடன், குறிப்பிட்ட ரக விமானங்களை இயக்குவதற்கான  டி.ஜி.சி.ஏ. லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் 1-8-2019-ந் தேதியில் 53 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினர் 56 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 58 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்டு 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடை பெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். புதுடெல்லியில் நேர்காணல் நடக்கிறது.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.1000 கட்டண டி.டி.யுடன், விண்ணப்ப படிவத்தை நிரப்பி எடுத்துச் செல்ல வேண்டும். தேவையான சான்றுகளை உடன் கொண்டு சென்று நேர்காணலில் பங்கேற்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Next Story