சீர்காழியில் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க நடவடிக்கை வர்த்தக சங்க கூட்டத்தில் தீர்மானம்


சீர்காழியில் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க நடவடிக்கை வர்த்தக சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 30 July 2019 4:15 AM IST (Updated: 30 July 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சீர்காழி,

சீர்காழியில், வர்த்தக சங்கம் சார்பில் நீர் மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்க தலைவர் எஸ்.கேஆர்.சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கோவி.நடராஜன், செயலாளர்கள் துரை, மார்க்ஸ்பிரியன், பொது தொழிலாளர்கள் சங்க அமைப்பு செயலாளர் கோடங்குடி சங்கர், மாநில பொதுக்குழுவை சேர்ந்த உத்திரா.பொன்னழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குளங்கள் தூர்வாரும் பணி

நீர் மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றில் அனுமதி பெற்று சீர்காழி நகரில் உள்ள பல்வேறு குளங்களில் இருக்கும் செடி, கொடிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணியை பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோருடன் இணைந்து செயல்படு வது. அதில் முதல் கட்டமாக சீர்காழி நகரில் உள்ள முதலியார் குளம், கரிக்குளம், சுக்ரவார குளம் ஆகிய குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபடுவது. சீர்காழி நகரில் வார்டுக்கு 50 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்வது. மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில் வர்த்தக சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story