திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: மண்எண்ணெய் கேனுடன் தீக்குளிக்க வந்த தம்பதி
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் கேனுடன் தம்பதி தீக்குளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் எஸ்.சிவராசு கோரிக்கை மனுக்களை பெற்று அதை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். இந்தநிலையில் மதியம் சுமார் 1 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் வழியாக போலீஸ் பாதுகாப்பையும் மீறி, முசிறி அருகே உள்ள சிட்டிலரை கைகாட்டி கிராமத்தை சேர்ந்த மளிகைக்கடைக்காரர் செந்தில்குமார் (வயது 38), அவரது மனைவி கவிதா (34) ஆகியோர் 5 லிட்டர் மண்எண்ணெய் கேனுடன் உள்ளே வந்தனர். கேனில் 2 லிட்டர் அளவுக்கு மண்எண்ணெய் இருந்தது.
குறைதீர்க்கும் மனு எழுதும் இடத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தவர்களை அங்கிருந்து போலீசார் கண்டறிந்து அவற்றை பாய்ந்து சென்று பறித்தனர். உடனே தம்பதி, அங்கேயே அழத்தொடங்கினர். பின்னர் அவர்களை கலெக்டரிடம் புகார் மனு கொடுக்க போலீசார் அழைத்து சென்றனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2013-ம் ஆண்டு முதல் தும்பலம் கிராமத்தில் நான் மளிகைக்கடை நடத்தி வந்தேன். 2016-ம் ஆண்டு தும்பலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றிய மேலாளர் ஒருவர், அடிக்கடி என் மளிகைக்கடைக்கு வந்ததால் நன்கு பழக்கமானார். அவர் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர். 2017-ம் ஆண்டு வங்கியில் எனக்கு கிளார்க் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.50 ஆயிரம் வாங்கினார்.
ஆனால், வேலை வாங்கி தரும் முன்னரே அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். பணி ஓய்வுக்கு முன்பாக என்னிடம் ரூ.1 லட்சத்திற்கு மளிகை சாமான்கள் வாங்கினார். மேலும் எனது மனைவி பெயரில் வாடகை பத்திரக்கடன் ரூ.2 லட்சம், என் தங்கை பெயரில் ரூ.2 லட்சம் வங்கியில் கடன் வாங்கி அவரே பணத்தை வைத்துக் கொண்டார். 3 மாதத்தில் பணத்தை திரும்ப தருவதாக கூறிய அவர், அதன் பின்னர் தும்பலம் கிராமத்திற்கு வருவதை நிறுத்திக் கொண்டார். கடந்த மே மாதம் எனக்கு ரூ.10 லட்சம் வரை பணம் ஏற்பாடு செய்து தருவதாக கூறி, எனது பெயரில் உள்ள நிலத்தின் அசல் பத்திரம், கையெழுத்திட்ட தொகை நிரப்பப்படாத 9 காசோலைகள், மாமியார் பெயரிலான நில பத்திர ஆவணம் அனைத்தையும் பெற்றுக்கொண்டார். ஆனால், சொன்னபடி பணம் தரவில்லை.
கடந்த மே மாதம் 27-ந்தேதி என்னையும், என் மனைவியையும், மேலாளர் அவரது வீட்டிற்கு வரச்சொன்னார். அங்கு சென்றதும், நீதான் என்னிடம் ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டாய். தற்போது ரூ.3 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.13 லட்சம் தரவேண்டும். இல்லையென்றால் உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என்று அடியாட்களை வைத்து மிரட்டினார். இதனால் மிகுந்த மனவேதனையில் நானும், எனது மனைவியும் மே மாதம் 29-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றோம். அக்கம் பக்கத்தினர் மீட்டு முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முசிறி போலீசார் வாக்குமூலம் பெற்றுவிட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். 2 மாதத்திற்கு மேலாகியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் இருந்து எங்கள் நிலத்தின் அசல் பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரம் ஆகியவற்றை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story