கோலாலம்பூர், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தப்பட்ட ரூ.90½ லட்சம் தங்கம் பறிமுதல்
கோலாலம்பூர், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தப்பட்ட ரூ.90½ லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 11 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்திற்கு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன.
அந்த விமானங்களில் வரும் பயணிகளை விமான நிலையத்தில் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கம். அவ்வாறு நடத்தப்படும் சோதனையில் சில பயணிகள் தங்கம் போன்றவற்றை கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக தங்கம் கடத்தல் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. இதேபோல் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. 2 விமானங்களில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
2½ கிலோ தங்கம்
அப்போது மலேசியாவில் இருந்து வந்த பயணிகளில் 5 பேரும், சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகளில் 6 பேரும் என மொத்தம் 11 பயணிகள், தங்கள் உடைமைக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்சியை சேர்ந்த அப்துல் மாத்யூஸ், அப்துல் காதர், அப்துல் ரஹீம், செய்யது இப்ராஹிம், சாகுல் அமீது, சாதிக் பாட்சா, சென்னையைச் சேர்ந்த நரசிம்ம செட்டி, செய்யது அபுதாகிர், அம்ஜத் கான், மதுரையைச் சேர்ந்த சிக்கந்தர், திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து தங்க கட்டிகள், நகைகள் என 2½ கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு மொத்தம் ரூ.90 லட்சத்து 50 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிடிபட்ட 11 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story