கண்காணிப்பு கேமரா அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் கண்காணிப்பு கேமரா அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் அரியலூரில் நடைபெற்றது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் கண்காணிப்பு கேமரா அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. இதற்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் செல்போன் கோபுரத்தில் உள்ள பேட்டரிகள் மற்றும் இதர பொருட்கள் அதிக அளவில் திருடு போவதால் அனைத்து செல்போன் கோபுரங்களிலும் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். கிராமங்கள் தோறும் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் திருட்டு ஏற்படாத வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அனைத்து கிராம மக்களும் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக செயல்பட்டு கிராம பாதுகாப்பிற்காக இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வெளிநபர்கள் மற்றும் சந்தேகப்படும் நபர்களை கண்காணித்து அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். மது போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும். திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கண்காணிப்பு கேமரா அமைப்பதாகவும், சாலை விதிகளை மதித்து நடப்பதாகவும், ஹெல்மெட் அணிவதாகவும் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதில் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் செல்போன் கோபுர அதிகாரிகள், அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story