ரெயில்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை தனியார்மயமானால் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்
ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை தனியார் மயமானால் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என கரூரில் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் கண்ணையா கூறினார்.
கரூர்,
எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தின் சேலம் கோட்ட கரூர் கிளை சார்பில், ரெயில்வே தனியார் மயமாக்கப்படுவது மற்றும் ஊழியர்களிடையே மத்திய அரசின் விரோத போக்கினை கண்டித்து கரூர் ரெயில் நிலைய வளாகத்தில் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதற்கு சேலம் கோட்ட தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் கண்ணையா கலந்து கொண்டு பேசுகையில், கேங்மேன், டிராக்மேன், கலாசி என இருந்ததை மெக்கானிக்கல்-எலக்ட்ரிக்கல் அசிஸ்டன்ட், டிராக் மெய்டனர் என்கிற பிரிவில் சேர்த்தது, ரெயில்வே ஊழியர்களுக்கு இலவச பயண அட்டை பெற்று தந்தது என பல்வேறு போராட்டங்களை எஸ்.ஆர்.எம்.யு. முன்னெடுத்து சென்றது. அந்த வகையில் 2004-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்சன் வாங்கி தரப்படும். மேலும் கேரளா, ஆந்திரா உள்ளிட்டவற்றில் பணியாற்றுபவர்களை சொந்த இடங்களுக்கு வரும் வகையில் மாற்ற வேண்டும் என நாம் அழுத்தம் கொடுத்ததன் பேரில் விரைவில் அதற்குரிய 3 ஆயிரம் பணியிடங்களை அறிவிக்க உள்ளனர்.
வருவாய்
ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் கோடியை ரெயில்வே துறை மூலம் ஊழியர்கள் வருவாய் ஈட்டி தருகிறார்கள். அப்படி இருக்கையில் ரெயில்வேயை தனியார்மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும். மேலும் ரெயில்வே ஊழியர்களின் பாதுகாப்பு அரணாய் விளங்கும் எஸ்.ஆர்.எம்.யு.க்கு விரைவில் நடக்க உள்ள தேர்தலில் வாக்களித்து ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யு. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
டிக்கெட் விலை உயரும்
கூட்டம் முடிந்ததும் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் கண்ணையா நிருபர்களிடம் கூறுகையில், லாபத்தில் இயங்குகிற ரெயில்களை தனியாருக்கு கொடுப்பது என்பது நடுத்தர, ஏழை-எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். சென்னை -கோவைக்கு படுக்கைவசதி (ஸ்லீப்பர்) பெட்டியில் ரூ.315 என்கிற டிக்கெட் விலை ரூ.ஆயிரமாக உயரும். சென்னை-மதுரைக்கு ரூ.835 என்கிற டிக்கெட் விலை ரூ.2 ஆயிரமாக உயரும். இதனால் அடித்தட்டு மக்கள் ரெயிலை, விமானத்தில் செல்வதுபோல பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். மேலும் தமிழகத்தில் லாபத்தில் இயங்குகிற ஐ.சி.எப். ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளனர். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறிதான். இதனை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக முதலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதன் பின்னர் அகில இந்திய அளவில் ஊழியர்களை ஒன்றுதிரட்டி ஆலோசித்து போராடுவோம் என்றார்.

Related Tags :
Next Story