ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - வக்கீல்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும் என்று வக்கீல்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி,
புதுவை வக்கீல்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் முத்துவேலு தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் தாமோதரன், துணை தலைவர் கமலினி, இணை செயலாளர்கள் லாவண்யா, தேவேந்திரன், கார்கி, சண்முகம், கனகராஜ் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
புதுவைக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். தமிழகம் மற்றும் புதுவையில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. சிறிய மாநிலமான புதுவையில் இந்த திட்டத்தை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
புதுவை மாநிலத்திற்கு தனி ஐகோர்ட்டு புதுவையில் அமைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும், சென்னை ஐகோர்ட்டும் மேற்கொள்ள வேண்டும். புதுவை நீதித்துறையில் வக்கீல்களை கொண்டு தேர்வு செய்து நிரப்பப்பட வேண்டிய 5 முன்சீப், மாஜிஸ்திரேட் பதவிகள் மற்றும் 2 மாவட்ட நீதிபதிகள் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும்.
சென்னை ஐகோர்ட்டு பணியில் புதுவையை சேர்ந்த வக்கீல்கள் மற்றும் புதுச்சேரி நீதித்துறையை சேர்ந்த மாவட்ட நீதிபதிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். புதுச்சேரி மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணைய தலைவர் பதவியையும், மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு மன்ற தலைவர் பதவியையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story