காரைக்குடி வழியாக இயக்கப்பட உள்ள தாம்பரம்-நெல்லை ரெயிலை தினசரி இயக்க வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்
தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்குடி,
சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு காரைக்குடி வழியாக புதிய ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில் நாளை மறுநாள் (1-ந்தேதி) முதல் ஒவ்வொரு வாரமும் வியாழக் கிழமை அன்று நெல்லையில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை வழியாக காரைக்குடிக்கு இரவு 11.50 மணிக்கு வந்து அதன் பின்னர் புதுக்கோட்டை, திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 8.20 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மறு மார்க்கத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு காரைக்குடிக்கு இரவு 2 மணிக்கு வந்து அதன் பின்னர் மறுநாள் காலை 10 மணிக்கு நெல்லையை வந்தடைகிறது. வாரந்தோறும் சோதனை ரெயிலாக விடப்படும் இந்த ரெயிலை தினந்தோறும் இயக்கிட வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காரைக்குடி தொழில் வணிக தலைவர் சாமி திராவிடமணி கூறியதாவது:-
சிவகங்கை மாவட்ட பொதுமக்களுக்கு போதிய ரெயில் வசதி கிடையாது. ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டின்போது இந்த மாவட்டத்திற்கு கூடுதல் ரெயில் சேவை ஏதும் இருக்குமா என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றம் தான் கிடைக்கிறது. இது தவிர, இந்த பகுதியில் சில ரெயில்கள் சோதனை ஓட்டமாக வாராந்திர ரெயிலாக இயக்கப்பட்டு அதன் பின்னர் அந்த ரெயில் சேவை முற்றிலும் நிறுத்தப்படுகிறது.
காரைக்குடி பகுதி மக்கள் அதிக அளவில் வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் ரெயில் சேவையைத்தான் எதிர்பார்த்து பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் தற்போது அறிவித்துள்ள இந்த தாம்பரம்-நெல்லை வாராந்திர ரெயிலை சோதனை ரெயிலாக இல்லாமல் தினசரி ரெயிலாக நிரந்தரமாக இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் தான் இந்த பகுதி மக்களுக்கு போதிய ரெயில் சேவை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story